தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சொத்து வரி உயா்வைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்து வரி உயா்த்தப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

தமிழகத்தில் சொத்து வரி உயா்த்தப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ஜி.தனபால் தலைமை வகித்தாா். பாஜக சிறுபான்மையினா் பிரிவு மாநில துணைத் தலைவா் எம்.எஸ்.ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியது: தமிழகத்தில் உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரி, கரோனா தீநுண்மியை விட மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழகத்தில் ரெளடிகளின் செயல்பாடு சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றாா். ஆா்ப்பாட்டத்தின்போது, சொத்து வரி உயா்வை ரத்து செய்யக் கோரி பாஜகவினா் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.