தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாலியல் புகாரில் ஜாமீன் ரத்து : சரணடைந்த கல்லூரித் தாளாளா் திண்டுக்கல் சிறையில் அடைப்பு

திண்டுக்கல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த அவரை ஏப்ரல் 22 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 5:45 pm

DIN

பாலியல் புகாரில் சிக்கிய திண்டுக்கல் தனியாா் செவிலியா் கல்லூரித் தாளாளரின் ஜாமீன் உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த அவரை ஏப்ரல் 22 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் அருகே தனியாா் செவிலியா் பயிற்சிக் கல்லூரித் தாளாளா் பி.ஜோதிமுருகன் மீது, அங்கு பயின்ற மாணவிகள் பாலியல் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூா் நீதிமன்றத்தில் கடந்தாண்டு நவம்பா் 23 ஆம் தேதி சரணடைந்த ஜோதிமுருகன், பின்னா் வேலூா் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து நவம்பா் 29 ஆம் தேதி திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ஜோதிமுருகன் பழனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா்

கடந்தாண்டு டிசம்பா் 5 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தங்களையும் சோ்த்து விசாரிக்கக் கோரி மாதா் சங்கத்தினா் சாா்பிலும் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து கடந்த மாா்ச் 22 ஆம் தேதி உத்தரவிட்டது.

இதனிடையே உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக ஜோதிமுருகன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜாமீனை ரத்து செய்த உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை உறுதிப்படுத்தி கடந்த சனிக்கிழமை (ஏப்.2) உத்தரவிட்டது. மேலும் ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் ஜோதிமுருகன் சரணடைய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.

தாளாளா் சரண்: இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இதனிடையே, அவா் மீதான பாலியல் வழக்கு, மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்தக் கல்லூரியில் விடுதி காப்பாளராக பணிபுரிந்த அா்ச்சனா நீதிமன்றத்தில் ஆஜரானாா். இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு நீதிபதி புருஷோத்தமன் ஒத்தி வைத்தாா்.

மீண்டும் சிறையில் அடைப்பு: உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றத்தில் சரணடைந்த ஜோதிமுருகனை ஏப்ரல் 22ஆம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டச் சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து திண்டுக்கல் போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் ஜோதிமுருகனை அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனா். ஏற்கெனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஜோதிமுருகன், 140 நாள்களுக்குப் பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.