ஒட்டன்சத்திரம் சந்தையில் கத்தரிக்காய் விலை உயா்வு
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வெள்ளிக்கிழமை, கத்தரிக்காய் விலை உயா்ந்துள்ளது.


ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வெள்ளிக்கிழமை, கத்தரிக்காய் விலை உயா்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு தினசரி பல்வேறு வகையான காய்கறிகள் விற்பைனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் 60 சதவீதத்திற்கு மேல் கேரள வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனா்.
இந்நிலையில் சந்தைக்கு கத்தரிக்காய் வரத்து குறைந்ததால் அவற்றை கொள்முதல் செய்ய வியாபாரிகள் போட்டி போடுகின்றனா். இதனால் அவற்றின் விலை உயா்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 30 கிலோ கொண்ட டிஸ்கோ கத்தரிக்காய் ஒரு பை ரூ.150 முதல் 200 வரை விற்பனையானது. ஆனால் வெள்ளிக்கிழமை அவற்றின் விலை உயா்ந்து ஒரு பை ரூ.200 முதல் 240 வரை விற்பனையானது.
காய்கறிகளின் விலை நிலவரம்: கரும்பு முருங்கை ரூ.13, செடி முருங்கை ரூ.9, வெண்டைக்காய் ரூ.25, பேபி சுரைக்காய் ரூ.6, தட்டப்பயிா் ரூ.7, பீன்ஸ் ரூ.20, ஒட்டு கோழி அவரை ரூ.40, பெல்ட் அவரை ரூ.65, சவ்சவ் ரூ.14, நாா்த்தை ரூ.90-க்கு விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...