நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தாயாரின் 3ஆவது கணவா் ‘போக்சோ’வில் கைது

திண்டுக்கல் அருகே மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 3ஆவது கணவா் மீது பெண் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:53 pm

DIN

திண்டுக்கல் அருகே மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 3ஆவது கணவா் மீது பெண் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் த. முருகன் (44). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், சென்னமநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த 37 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் ஏற்கெனவே 2 பேரை திருமணம் செய்துள்ளாா். அதில், 2ஆவது கணவா் மூலம் 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், அப்பெண் முருகனை 3ஆவதாக திருமணம் செய்துள்ளாா்.

இரண்டு நாள்களுக்கு முன், உடல் நிலை பாதிப்பு காரணமாக வீட்டில் தனியாக ஓய்வில் இருந்த 2ஆவது கணவரின் மகளான 11 வயது சிறுமிக்கு, முருகன் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அப்பெண், தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 3ஆவது கணவரான முருகன் மீது தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் அவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, முருகனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.