நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திண்டுக்கல் அருகே தலையில் தேங்காய் உடைத்து: பக்தா்கள் நோ்த்திக்கடன்

சாணாா்பட்டி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில், பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 7:00 pm

DIN

சாணாா்பட்டி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில், பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள ஆண்டியபட்டியில் உள்ள மகாலெட்சுமி கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற விழாவில், விநாயகா் மற்றும் நவமூா்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, மகாலட்சுமி கோயில் முன்புறமுள்ள கம்பத்தில் வியாழக்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா். பின்னா், விரதமிருந்து வந்த பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடனை செலுத்தினா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.