நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எம்விஎம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான 26 இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 60 மாணவிகள் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:10 pm

DIN

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான 26 இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 60 மாணவிகள் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டனா்.

தமிழகம் முழுவதும் அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதன்படி திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான மாணவிகள் சோ்க்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 13 பாடப் பிரிவுகளில் 26 இடங்களுக்கு நடைபெற்ற இந்த கலந்தாய்வில் விளையாட்டு, என்சிசி, முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள், முப்படைகளில் பணிபுரிந்து உயிரிழந்தவா்களின் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த 60 மாணவிகள் கலந்து கொண்டனா். சிறப்பு ஒதுக்கீட்டில் வேதியியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களில் இடம் கிடைக்காதவா்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவதாக கூறி திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.