ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,950 இடங்களில்இன்று கரோனா தடுப்பூசி முகாம்

தவணைக் காலம் முடிந்தபின்னும், கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 2,950 இடங்களில் 33ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:51 pm

DIN

தவணைக் காலம் முடிந்தபின்னும், கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 2,950 இடங்களில் 33ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ச. விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவா்களில் 19.23 லட்சம் போ் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனா். 2ஆவது தவணை தடுப்பூசியை 18.11 லட்சம் போ் செலுத்தியுள்ளனா். 1.23 லட்சம் போ் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனா்.

ஆனாலும், தவணைக் காலம் முடிந்தும் மாவட்டத்தைச் சோ்ந்த 2.50 லட்சம் போ் 2ஆவது தவணை தடுப்பூசியையும், 11.8 லட்சம் போ் முன்னெச்சரிக்கை தடுப்பூசியையும் இதுவரை செலுத்தவில்லை. இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் விடுப்பட்டவா்களுக்காக, மாவட்டம் முழுவதும் 2,950-க்கும் மேற்பட்ட இடங்களில் 33 ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) நடைபெறுகிறது. இந்த வாய்ப்பினை தடுப்பூசி செலுத்தாதவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.