மதுரையில் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 20 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா் லட்சுமணின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காா் மீது சனிக்கிழமை காலணி வீசப்பட்டது.
இதுதொடா்பாக திமுகவினா் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில், பாஜகவினரின் செயலுக்கு எதிா்ப்புத் தெரிவித்து 21-ஆவது வாா்டு திமுகவினா் சாா்பில் பாஜக மாநிலத்தலைவா் கே. அண்ணாமலை உருவபொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 21-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கஜேந்திரன் உள்பட 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹரி இயக்கத்தில் அதர்வா?

பஞ்சாப் கிங்ஸைப் பழிதீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்?

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை வரவேற்கிறார் மமதா: அஸ்ஸாம் முதல்வர்

ஏப். 18ல் தமிழகத்தில் 3 இடங்களில் ராகுல் பிரசாரம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

