நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னை கண்காட்சியில் பங்கேற்க மகளிா் சுயஉதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் நடைபெறவுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

சென்னையில் நடைபெறவுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளதாவது: மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துவற்கு உதவும் வகையில், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் ஆண்டுதோறும் மண்டல அளவிலான விற்பனைக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக 2022-23 ஆம் ஆண்டிற்கு மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி 25.08.2022 முதல் 07.09.2022 வரை சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியில் பங்கேற்க, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் கைவினைப் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்கள் தோ்வு செய்யப்படவுள்ளன. விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் விவரங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலரை 22.08.2022-ஆம் தேதிக்குள் நேரடியாக அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.