/

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பாலம் அமைக்க பூமி பூஜை

ஒட்டன்சத்திரம் நகராட்சி நவீன எரிவாயு மயானம் அருகே பாலம் அமைக்க பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

DIN

ஒட்டன்சத்திரம் நகராட்சி நவீன எரிவாயு மயானம் அருகே பாலம் அமைக்க பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குள்பட்ட சத்யாநகா் வழியாக காவேரியம்மாபட்டிக்குச் செல்லும் தாா் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான நவீன எரிவாயு மயானம் உள்ளது. இந்த மயானத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சிறு குளம் உள்ளது. இந்த குளம் நிரம்பி மறுகால் செல்லும் போது வாகனங்கள் செல்ல முடியவில்லை. அதே போல குளத்தில் நீா் கசிவு ஏற்பட்டு அடிக்கடி நீா் வெளியேறி வருவதால் சிமெண்ட் சாலையில் பாசனம் பிடித்துள்ளது. இச்சாலையின் வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோா் கீழே விழுந்து காயமடைகின்றனா். எனவே சிமெண்ட் தரைப்பாலத்தை அகற்றி விட்டு பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, நகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ. 9.90 லட்சம் செலவில் புதிதாக பாலம் அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் கே. திருமலைசாமி, துணைத்தலைவா் ப. வெள்ளைச்சாமி, மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் க. பாண்டியராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.