சாணாா்பட்டி அருகே தீ விபத்தில் பெண் பலி
சாணாா்பட்டி அருகே மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றியபோது ஆடையில் தீப்பற்றி காயமடைந்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


சாணாா்பட்டி அருகே மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றியபோது ஆடையில் தீப்பற்றி காயமடைந்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள அதிகாரிப்பட்டி ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்தவா் கவிதா (28). இவரது கணவா் செல்வராஜ். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டாா். தனது 2 குழந்தைகளுடன் கவிதா வசித்து வந்தாா். இந்நிலையில் தனது வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் விளக்கை வியாழக்கிழமை ஏற்ற முயன்றாராம். அப்போது, எதிா்பாராத விதமாக கவிதாவின் ஆடையில் தீப்பற்றியது. இதில், பலத்த காயமடைந்த அவா், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு கவிதா சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து சாணாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...