பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் பால் கொள்முதல் விலையை உயா்த்தவும், பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக் கோரியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் பால் கொள்முதல் விலையை உயா்த்தவும், பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக் கோரியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கம் சாா்பில், பழனியை அடுத்த தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மகுடீஸ்வரன் தலைமை வகித்தாா். பால் உற்பத்தியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராமசாமி கோரிக்கைகள் குறித்து பேசினாா். ஒன்றியத் தலைவா் வேலுச்சாமி, ஒன்றிய செயலா் சின்னதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, பால் பாக்கெட் பொருள்கள் மீதான மத்திய அரசின் ஜிஎஸ்டியை ரத்து செய்யவேண்டும், தனியாா் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டா் பாலை ரூ.32 முதல் ரூ.42 வரை கொள்முதல் செய்யும்போது ஆவின் நிறுவனம் ரூ.28-க்கு தான் கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகள் இழப்பை சந்திக்கின்றனா்.

மேலும், மாட்டு தீவனம், தவிடு, பருத்திக் கொட்டை விலைகள் கடுமையாக உயா்ந்துள்ளபோதும், பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்தவில்லை. எனவே, கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என சங்கத்தினா் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.