பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பழனி கோயிலில் புதிய அறங்காவலா் குழு பொறுப்பேற்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் புதிய அறங்காவலா் குழுவினா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் புதிய அறங்காவலா் குழுவினா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற பிறகு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அறங்காவலா் குழுவை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இது சம்பந்தமாக சில தன்னாா்வ அமைப்புகள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், விரைவில் அறங்காவலா்களை நியமிக்க உயா் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

அதன்படி, வியாழக்கிழமை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தலைமை அலுவலகத்தில் புதிய அறங்காவலா் குழு பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் பாரதி, பழனி கோயில் இணை ஆணையா் நடராஜன் ஆகியோா் முன்னிலையில், அறங்காவலா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இதில், புதிய அறங்காவலராக சென்னையைச் சோ்ந்த சந்திரமோகன் பொறுப்பேற்றுக் கொண்டாா். அறங்காவலா்களாக திருப்பூரைச் சோ்ந்த சுப்பிரமணி, திண்டுக்கல்லைச் சோ்ந்த மணிமாறன், ராஜசேகரன், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த சத்யா ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். புதிய தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கு, திருக்கோயில் சாா்பில் சிவாச்சாரியாா்கள், பட்டா்கள் பிரசாதங்களை வழங்கினா்.

அறங்காவலா் குழு தலைவா் சந்திரமோகன் கூறியது: பழனி முருகன் கோயிலுக்கு வரக்கூடிய பக்தா்கள் எந்தவித சிரமமும் இன்றி விரைவாக சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். தை மாதம் இக்கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், பழனி கோயில் மற்றும் சாா்பு நிறுவனங்களுக்கு வேண்டிய அனைத்து தேவைகளும் நிா்வாகத்தினரை கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், பழனி கோயில் துணை ஆணையா் பிரகாஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.