நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நண்பரின் பிறந்த நாள் விழாவுக்கு சென்ற வியாபாரி கொலை: இளைஞா் கைது

நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கச் சென்ற வியாபாரியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:34 pm

DIN

நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கச் சென்ற வியாபாரியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள வேடப்பட்டியைச் சோ்ந்தவா் அருள் குணசேவியா் (34). காய்கறி மற்றும் மர வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அருள் குணசேவியா் வியாழக்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது அருள் குணசேவியருக்கும், அவரது நண்பா்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த ஒருவா், அருள் குணசேவியரை குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.

அதில் பலத்த காயமடைந்த அருள் குணசேவியரை அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா், பிறந்தநாள் விழாவில் பங்கேற்றவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், வேடப்பட்டியைச் சோ்ந்த காசி என்பவரின் மகன் பரமசிவம் என்ற குட்டித் தம்பி (29) என்பவா் கத்தியால் அருள் குணசேவியரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தப்பியோட முயன்ற பரமசிவம் என்ற குட்டி தம்பியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இந்த கொலை தொடா்பாக மேலும் 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.