பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம் சோ்க்கை

பழனி தலைமை தபால் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:33 pm

DIN

பழனி தலைமை தபால் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

பழனி: பழனி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியச் செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜமாணிக்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அருள்செல்வன், கமலக்கண்ணன், நகரச் செயலா் கந்தசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையை குறைக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலா் கனகு, ஒட்டன்சத்திரம் ஒன்றியச் செயலா் சிவமணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.