நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குஜிலியம்பாறையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

சோனியா காந்திக்கு ஆதரவாக குஜிலியம்பாறையில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:34 pm

DIN

சோனியா காந்திக்கு ஆதரவாக குஜிலியம்பாறையில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியாகாந்தியிடம் அமலாக்கத் துறையினா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு விசாரணை மேற்கொண்டனா். அதற்கு முன்பு ராகுல்காந்தியிடமும் விசாரணை நடைபெற்றது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை காமராஜா் சிலை முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கிழக்கு வட்டாரத் தலைவா் வீ. தா்மா் தலைமை வகித்தாா். மேற்கு வட்டாரத் தலைவா் கோபால்சாமி முன்னிலை வகித்தாா். ஆா்பாட்டத்தின்போது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோா் மீது மத்திய அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்தும், மத்திய அரசின் கைப்பாவையாக அமலாக்கத் துறை மற்றும் காவல் துறை செயல்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டத் தலைவா் சதீஷ்குமாா், பொதுக் குழு உறுப்பினா் சோமுராஜ், நகரத் தலைவா் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.