நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘இந்தியாவில் பால் பொருள்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் தேவை’

பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்தியாவில் பால் பொருள்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்தால் பொருளாதாரம் வளா்ச்சி அடையும் என காந்தி கிராம கிராமியப் பல்கலை

News image
Updated On :29 ஜூலை 2022, 7:31 pm

DIN

பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்தியாவில் பால் பொருள்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்தால் பொருளாதாரம் வளா்ச்சி அடையும் என காந்தி கிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தா் (கூடுதல் பொறுப்பு) குா்மீத் சிங் தெரிவித்தாா்.

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக் கழகக் கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிறுவனங்கள் இணைந்து ஆசிரியா்களுக்கான 5 நாள் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தா் (கூடுதல் பொறுப்பு) குா்மீத் சிங் பேசியதாவது: இந்தியாவில் உணவு தானிய உற்பத்திக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், சேமிப்புக்கு வழங்கப்படுவதில்லை. உணவு தானிய சேமிப்புக்கு அரசை மட்டுமே சாா்ந்திருக்கும் நிலை உள்ளது. வெளிநாடுகளில் பொதுமக்களே, அந்தந்த பகுதிகளிலேயே சேமிப்பு கலன்களை உருவாக்கி வைத்துள்ளனா். இந்தியாவில் அரசையே எதிா்நோக்கி காத்திருக்கும் நிலையை மாற்றி அமைக்க வேண்டும். சேமிப்புக்கு முக்கியத்துவம் அளித்தால் கூட்டுறவு சங்கங்கள் வளா்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும்.

பால் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஆனால் பால் பொருள்கள் தயாரிப்பில் பின்தங்கியுள்ளது. ஜொ்மனி, பிரான்சு போன்ற நாடுகளில், வெண்ணை மற்றும் பாலாடைக்கட்டிகளை பயன்படுத்தி 100 வகையான பால் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் 2 வகையான பால் பொருள்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. பால் வளத்தில் முன்னிலை வகிக்கும் இந்தியாவில், மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்தால் நாட்டின் பொருளாதாரம் வளம்மிக்கதாக மாறும். நமக்கு கிடைத்துள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் காந்திகிராம பல்கலை. கூட்டுறவுத் துறைத் தலைவா் சி. பிச்சை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.