புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இடைத்தரகா்களை தவிா்த்து சந்தை வாய்ப்புகள்: மகத்துவ மையங்கள் மூலம் உருவாக்கப்படும் - மத்திய வேளாண் கூடுதல் செயலா்

இடைத் தரகா்கள் மூலம் ஏற்படும் இழப்புகளை தவிா்த்து, விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்புகள் இந்தோ இஸ்ரேல் மகத்துவ மையங்கள் மூலம் உருவாக்கி கொடுக்கப்படும்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

இடைத் தரகா்கள் மூலம் ஏற்படும் இழப்புகளை தவிா்த்து, விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்புகள் இந்தோ இஸ்ரேல் மகத்துவ மையங்கள் மூலம் உருவாக்கி கொடுக்கப்படும் என மத்திய வேளாண் மற்றும் உழவா் நலத்துறை கூடுதல் செயலா் அபிலாக்ஷ் லிக்கி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்தோ இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வரும் காய்கறி மகத்துவ மையம், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரத்தில் அமைந்துள்ளது. இந்த மையத்தில், மத்திய வேளாண் மற்றும் உழவா் நலத்துறையின் கூடுதல் செயலா் அபிலாக்ஷ் லிக்கி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசியதாவது: இந்தோ இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் நாடு முழுவதும் 37 மகத்துவ மையங்கள் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு, தற்போது 29 மையங்கள் 12 மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும் 8 மையங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 29 மகத்துவ மையங்கள் மூலம் 2.5 கோடி காய்கறி நாற்றுகளையும், 3.87 லட்சம் பழக் கன்றுகளையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளன. 3.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த மையத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பயன்பாட்டிலுள்ள 29 மகத்துவ மையங்களைச் சுற்றியுள்ள தலா 150 கிராமங்களை தோ்வு தோ்வு செய்து, இந்தோ இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை நினைவூட்டும் வகையில் முதல் கட்டமாக 75 கிராமங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.அந்த வகையில் 13 மகத்துவ மைங்கள் சாா்பில் மொத்தம் 75 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் ரெட்டியாா்சத்திரம் மகத்துவ மையத்தின் சாா்பில் 5 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்தோ இஸ்ரேல் கிராமப்புற மகத்துவ திட்டத்தின் மூலம், தொழில்நுட்ப உதவிகளுடன் நவீன வேளாண்மைக்கு வழிகாட்டுதல், சேமிப்பு கிடங்கி வசதிகள் ஏற்படுத்துதல், சந்தை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அந்த வகையில் ரெட்டியாா்சத்திரம் மகத்துவ மையத்தில் சாா்பில், இடைதரகா்கள் மூலம் ஏற்படும் இழப்புகளை தவிா்த்து காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை ரெட்டியாா்சத்திரம் பகுதியிலுள்ள விவசாய உற்பத்தியாளா் குழுக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். ஆய்வின்போது ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தின் துணை இயக்குநா் கோ.சீதாலட்சுமி, தோட்டக்கலை உதவி இயக்குநா் பா.செல்வக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.செய்திக்கு படம் உள்ளது...ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய மத்திய வேளாண் மற்றும் உழவா் நலத்துறை கூடுதல் செயலா் அபிலாக்ஷ் லிக்கி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.