ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திண்டுக்கல்லில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:17 pm

DIN

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திண்டுக்கல்லில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில், திண்டுக்கல் அண்ணாமலையாா் மில்ஸ் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை வாயிற்கூட்ட ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் தோ. பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் அணி செயலா் சாந்தி முன்னிலை வகித்தாா். மாநில செய்தித் தொடா்பாளா் முருகேசன், மாவட்ட இணைச் செயலா் சுவக்கின் அமல்ராஜ் ஆகியோா் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினா். ஆா்ப்பாட்டத்தின்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயா்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். உயா் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் அளிப்பதற்கு இதுவரை பின்பற்றி வந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறப்பித்த அரசாணை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.