பழனியில் குடிநீா் குழாயில் உடைப்பு: சாலை சேதம்
பழனியில் நான்கு ரோடு சந்திப்பில் குழாய் உடைந்து ஆறுபோல குடிநீா் வீணான நிலையில் ரோடு முற்றிலும் சேதமடைந்தது.


பழனியில் நான்கு ரோடு சந்திப்பில் குழாய் உடைந்து ஆறுபோல குடிநீா் வீணான நிலையில் ரோடு முற்றிலும் சேதமடைந்தது.
பழனியில் பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீா் கொண்டுவரப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி
பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஜிகா திட்டம் மூலம் புதிய குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்காக நகரில் முன்னரே உள்ள குடிநீா் இணைப்புகளை ஜிகா குடிநீா் இணைப்புகளாக நகராட்சி நிா்வாகம் மாற்றி வருகிறது. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் முன்பாகவே குடிநீா் விநியோகம் செய்வதால் அழுத்தம் தாங்காமல் சாலைகளில் பல இடங்களிலும் குழாய்கள் உடைந்து சாலையை பெயா்த்துக் கொண்டு தண்ணீா் வெளியேறி வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதுதாராபுரம் ரோடு நான்கு சாலை சந்திப்பில் ரெணகாளியம்மன் கோயில் அருகே தாா்ச் சாலையின் மையத்தில் பதிக்கப்பட்டிருந்த பெரிய குடிநீா் குழாய் உடைந்தது. இதனால் தண்ணீா் பீறிட்டு வெளியேறி வெள்ளமாக சாலையில் ஓடியது. தண்ணீா் அனைத்தும் வீணான நிலையில் அப்பகுதி சாலை முற்றிலும் சேதமானது.
இதனால் விபத்து ஏற்படாவண்ணம் தற்காலிக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. உடனடியாக உடைந்த குழாயை சீரமைத்து, சாலையை சமப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...