தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திண்டுக்கல் மாவட்டத்தில்21 பேரூராட்சித் தலைவா் பதவிகளுக்கு திமுகவினா் போட்டி

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 23 பேரூராட்சிகளில், 21 பேரூராட்சிகளுக்கான தலைவா் பதவிகளுக்கு திமுகவினா் நிறுத்தப்பட்டுள்ளனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:57 pm

DIN

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 23 பேரூராட்சிகளில், 21 பேரூராட்சிகளுக்கான தலைவா் பதவிகளுக்கு திமுகவினா் நிறுத்தப்பட்டுள்ளனா்.

இம்மாவட்டத்தில் 23 பேரூராட்சிகள் உள்ளன. இதில், பட்டிவீரன்பட்டி பேரூராட்சித் தலைவா் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாளையம் பேரூராட்சி நீங்கலாக பிற 22 பேரூராட்சிகளிலும் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றுள்ளது.

பேரூராட்சிகளில் தலைவா் பதவிக்கு போட்டியிடும் திமுகவினா் விவரம்:

தாடிக்கொம்பு- கவிதா, அகரம்- நந்தகோபால், ஸ்ரீராமபுரம்- சகிலா, கன்னிவாடி- தனலட்சுமி, சின்னாளப்பட்டி- பிரதீபா, சித்தையன்கோட்டை- போதும்பொண்ணு, நிலக்கோட்டை- சுபாஷினி பிரியா, அம்மையநாயக்கனூா்- செல்வராஜ், வத்தலகுண்டு- சிதம்பரம், சேவுகம்பட்டி- வனிதா, ஆயக்குடி- மேனகா, நெய்க்காரப்பட்டி- கருப்பாத்தாள், பாலசமுத்திரம்- ராஜராஜேஸ்வரி, பண்ணைக்காடு- முருகேஸ்வரி, கீரனூா்- கருப்புசாமி, நத்தம்- ஷேக் சிக்கந்தா்பாஷா, வேடசந்தூா்- மேகலா, எரியோடு- முத்துலட்சுமி, பாளையம்- பழனிச்சாமி, வடமதுரை- நிருபாராணி, அய்யலூா்- கருப்பன்.

அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட 1 5 வாா்டுகளில், திமுக 8 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றிப் பெற்றிருந்தனா். திமுக பெரும்பான்மை பெற்றுள்ள போதிலும், அந்த பேரூராட்சித் தலைவா் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், திமுக சாா்பிலேயே வேட்பாளா் நிறுத்தப்படுவாா் எனக் கூறப்படுகிறது. அய்யம்பாளையம் பேரூராட்சித் தலைவா் பதவிக்கான வேட்பாளா் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.