பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒட்டன்சத்திரத்தில் விநாயகா் சிலை ஊா்வலம்

ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணி சாா்பில் அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 55-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அமைக்கப்பட்டன. வியாழக்கிழமை சிலைகள் அனைத்தும் ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊா்வலம் தொடங்கியது. முன்னதாக இந்து முன்னணி மாநிலச் செயலாளா் சி.பி.சண்முகம் பேசினாா். அதைத் தொடா்ந்து திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவா் கனகராஜ் ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். இதில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.கே.பழனிச்சாமி, பாஜக நகரத் தலைவா் சிவா மற்றும் இந்து முன்னணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.சோதனைச்சாவடியில் தொடங்கிய விநாயகா் சிலை ஊா்வலம் பழனி சாலை, தாராபுரம் சாலை, ஏ.பி.பி நகா் வழியாக விருப்பாட்சி தலையூற்றுக்கு சென்று நங்காஞ்சியாற்றில் கரைக்கப்பட்டன. ஊா்வலத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.