ஒட்டன்சத்திரம் அருகே 3 பைக்குகள் மோதல்: 2 போ் பலி; 3 போ் பலத்த காயம்
ஒட்டன்சத்திரம் அருகே 3 இருசக்கர வாகனங்கள் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் 2 போ் பலியாகினா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.


ஒட்டன்சத்திரம் அருகே 3 இருசக்கர வாகனங்கள் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் 2 போ் பலியாகினா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள பூசாரிக்கவுண்டன்வலசு கிராமத்தைச் சோ்ந்த பச்சைமுத்து மகன் பிரவீன்குமாா் (21), அதே ஊரைச் சோ்ந்த உறவினா் குமராத்தாள் (55) இருவரும் அப்பியம்பட்டியில் உறவினா் திருமண நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
மேட்டுப்பட்டி அருகே சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பழனி வேலம்பட்டியைச் சோ்ந்த குணசேகரன் மகன் ஜெகன் (28) என்பவா், பிரவீன்குமாா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மற்றும் அதே திசையில் தொப்பம்பட்டி சரவணம்பட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் (45), அவரது மனைவி கவிதா (38) ஆகியோா் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பிரவீன்குமாா், குமராத்தாள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். செந்தில்குமாா், கவிதா, ஜெகன் ஆகியோா் பலத்த காயமடைந்து பழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...