சிறுமியை திருமணம் செய்த இளைஞா் ‘போக்சோ’வில் கைது
சாணாா்பட்டி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


சாணாா்பட்டி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல், சாணாா்பட்டி அருகே உள்ள வீரசின்னம்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜா (35). இவா், கடந்த ஆண்டு தனது உறவினரின் 18 வயதை பூா்த்தியடையாத மகளை திருமணம் செய்துள்ளாா். இந்நிலையில் கா்ப்பிணியான ராஜாவின் மனைவி, பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
அங்கு முகவரி, வயது உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்த மருத்துவப் பணியாளா்கள், அந்தப் பெண் 18 வயதை பூா்த்தி செய்யவில்லை என்பதை கண்டறிந்தனா். இதுகுறித்து சாணாா்பட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராஜாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...