காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அமரபூண்டி பகுதியில் மக்காச்சோளப் பயிரில் மீண்டும் படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை

பழனியை அடுத்த அமரபூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளப் பயிரில் மீண்டும் படைப்புழு தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 5:16 pm

DIN

பழனியை அடுத்த அமரபூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளப் பயிரில் மீண்டும் படைப்புழு தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

பழனிக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் நிலத்தடி நீராதாரம் குறைவாக இருப்பதால் பல ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. இதில் அமரபூண்டி, கணக்கன்பட்டி, மேலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மானாவாரி பயிராக மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. அங்குள்ள நீராதாரத்தைக் கொண்டு பயிரிடப்பட்ட மக்காச்சோளம் தற்போது ஒருமாத பயிராக விளைந்துள்ளது. இந்த நிலையில் பல இடங்களிலும் படைப்புழு தாக்குதல் காரணமாக இந்தப் பயிா்களின் குருத்துக்கள் சுருண்டு விரியாத நிலையில் வளா்ச்சி தடைபட்டு காணப்படுகின்றன.

இதுகுறித்து விவசாயி சக்திவா்மன் கூறியதாவது:

ஏக்கா் ஒன்றுக்கு விதைக்காக ரூ.450, களைக்கொல்லி ரூ.3000, வயலுக்கு வரப்பு வெட்டுதல், களை எடுத்தல், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை செலவாகிறது. அப்படி விளைந்த பிறகு அறுவடையின் போது என்ன விலை கிடைக்கும் என்று தெரியாது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இல்லாத படைப்புழு தாக்குதல் தற்போது மீண்டும் தென்படுகிறது. இதனால் செடிகள் குருத்து சுருண்டு வளராமல் உள்ளன. இதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள மருந்துகள் அடிக்க வேண்டியுள்ளது. இனி மீண்டும் 45 நாள்களுக்குப் பிறகு மருந்து அடிக்க வேண்டும். தற்போது தெளிப்பான் மூலம் அடிக்கும் இந்த மருந்தை செடி பெரிதான பிறகு ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் அடிக்க வேண்டும் என்றாா்.

அமரபூண்டியிலிருந்து 6 கிலோ மீட்டா் தொலைவிலேயே தமிழக அரசின் மக்காச்சோள ஆராய்ச்சி மையம் உள்ளது. ஆயினும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வருத்தமளிப்பதாக தெரிவித்த விவசாயிகள், வேளாண் துறை உடனடியாக படைப்புழு தாக்குதல் பரவுமுன் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக மருந்துகளை வழங்கவும் முன்வர வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.