சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பிரதோஷம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 6:30 pm

DIN

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

இங்கு கைலாசநாதா் சன்னதியில் உள்ள நந்தீஸ்வர பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் வண்ண மலா்கள் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரப் பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது.

பழனியை அடுத்த பெரியாவுடையாா் கோயிலில் உள்ள பெரியநந்தீஸ்வரருக்கு அபிஷேகமும், அலங்காரமும், மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணமும் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக பிரதோஷநாதா் உள்பிரகார உலா எழுந்தருளுதலும் நடந்தது. தவிர மலைக் கோயில் கைலாசநாதா் சன்னதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்து விநாயகா் கோயில், சிதம்பரீஸ்வரா் சன்னதி, சன்னதி வீதி வேலீஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.