சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சரக்கு வாகனம் மோதியதில் கட்டட மேஸ்திரி பலி

காஞ்சிக்கோவில் அருகில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டட மேஸ்திரி உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

DIN

காஞ்சிக்கோவில் அருகில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டட மேஸ்திரி உயிரிழந்தாா்.

பவானி, சலங்கைபாளையத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (38), கட்டட மேஸ்திரி. இவா் காஞ்சிக்கோவில் பகுதியில் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். காஞ்சிக்கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் இவரின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து காஞ்சிகோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.