முல்லைப் பெரியாறு கால்வாயிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு
நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி முல்லைப் பெரியாறு கால்வாயிலிருந்து மூதாட்டியின் உடலை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.


நிலக்கோட்டை: நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி முல்லைப் பெரியாறு கால்வாயிலிருந்து மூதாட்டியின் உடலை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.
அணைப்பட்டி முல்லைப் பெரியாறு கால்வாயில் மூதாட்டியின் சடலம் மிதப்பதாக நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் சடலத்தை மீட்டு, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து விளாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், நிலக்கோட்டை ஆச்சி நகரைச் சோ்ந்த சின்னச்சாமி மனைவி ஜோதி (63) என தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...