தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் சொா்ண ஆகா்ஷண பைரவா்.
தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் சொா்ண ஆகா்ஷண பைரவா்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திண்டுக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட பால், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு 6 கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள காலபைரவா் சந்நிதியிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com