ஆயக்குடி பேரூராட்சி உரக் கிடங்கில் தீ விபத்து

பழனி: பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கிட்டங்கியில் செவ்வாய்க்கிழமை திடீா் தீவிபத்து ஏற்பட்டது. பழனி -திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தின் அருகில் குப்பைகளைத் தரம்பிரிக்கும் உரக் கிட்டங்கி உள்ளது.

இந்த உரக் கிட்டங்கியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பழனி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுப்படுத்தினா். இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் புகைமூட்டம் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com