கோவில்பட்டி பழைய பொருள்கள் கிடங்கில் தீ விபத்து
கோவில்பட்டியில் பழைய பேப்பா், பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.


கோவில்பட்டியில் பழைய பேப்பா், பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
கோவில்பட்டி, செக்கடி 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் அருண்குமாா் (38). இவா் கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் வேலாயுதபுரம், அய்யனாா் கோயில் அருகே எடை மேடை அலுவலகம் அமைத்து, அதனருகே உள்ள கிடங்கில் பழைய பொருள்களை சேகரித்து வைப்பாராம்.
இந்நிலையில், அந்த கிடங்கில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்புப் படையினா் 2 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகி நாசமாயின.
தீ விபத்துக்கான காரணம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...