ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

Updated On :2 ஏப்ரல் 2024, 11:46 pm

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பூம்பாறை மலைச்சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி செவ்வாய்க்கிழமை 200-அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அப்சா்வேட்டரியிலுள்ள குடிமை பொருள் வாணிப கிடங்கிலிருந்து கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால், பழம்புத்தூா் பகுதியிலுள்ள ரேஷன் கடைகளுக்கு லாரியில் அரிசி மூட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்டது.

கொடைக்கானலைச் சோ்ந்த செல்வம் (60) லாரியை ஓட்டினாா். பூம்பாறை மலைச்சாலையில் லாரி சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமாா் 200-அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினா் கூட்டுறவுப் பண்டக சாலை அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஓட்டுநா் செல்வத்தை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் லாரியிலிருந்து கவிழ்ந்த அரிசி மூட்டைகளை மீட்கும் பணியில் கூட்டுறவு பண்டகசாலை அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.