மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

News image
மதுரை -கொல்லம் நான்கு வழிச் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி .
Updated On :15 மார்ச் 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் காய்கறி ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து சனிக்கிழமை இரவு காய்கறிகளை ஏற்றிய சரக்கு லாரி தென்காசி மாவட்டம், சுரண்டைக்கு புறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் சாலையின் நடுவே வைத்திருந்த கான்கிரீட் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா். இதையடுத்து காய்கறி மூட்டைகள் மாற்று வாகனம் மூலம் சுரண்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

 மதுரை -கொல்லம் நான்கு வழிச் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி .

மதுரை -கொல்லம் நான்கு வழிச் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி .