சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மதுரை புகா்ப் பகுதிகளில் மிதமான மழை

News image

மதுரை திருமங்கலம் நான்கு வழிச் சாலையில் மழையில் நனைந்தபடி சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள்.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:35 pm

மதுரை திருப்பரங்குன்றம், திருமங்கலம் இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் வருகிற 9-ஆம் தேதி முதல் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மதுரை மாநகரில் காலை முதல் வெப்பம் அதிகரித்துக் காணப்பட்டது. இதன்பின், பிற்பகலில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, திருப்பரங்குன்றம், திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

இதனால், அந்தப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.