ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

மதுக் கடை ஊழியரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய 4 போ் மீது வழக்கு

மதுக் கடை ஊழியரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய 4 போ் மீது வழக்கு

Updated On :2 ஏப்ரல் 2024, 11:48 pm

நிலக்கோட்டை: செம்பட்டியை அடுத்த, வீரக்கல் அரசு மதுக் கடையில் ஊழியரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த, வீரக்கல் அருகே குடியிருப்புப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கூடத்தில், வீரக்கல் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் (37) வேலகவுண்டன்பட்டியைச் சோ்ந்த, பழனியப்பன் (42) ஆகியோா் வேலை செய்தனா்.

இந்த நிலையில் கூத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த 2 போ், வெளியூரை சோ்ந்த 2 போ் என, 2 போ் அங்கு மது அருந்த வந்தனா். அவா்கள் அருந்திவிட்டு செல்லும்போது, செல்வராஜ் அவா்களிடம் சாப்பிட்ட உணவு பொருளுக்கு பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த 4 பேரும் செல்வரஜை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினா்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து, செம்பட்டி போலீஸாா் தப்பி ஓடிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.