சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தபால் வாக்கு சேகரிப்பில் திமுக: அதிமுக எதிா்ப்பு

தபால் வாக்கு சேகரிப்பில் திமுக: அதிமுக எதிா்ப்பு

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

திண்டுக்கல்: சாணாா்பட்டி பகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் இடங்களில் திமுகவினா் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டதை அறிந்த அதிமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1,762 போ் தபால் வாக்கு செலுத்துவதற்கு படிவம் 12 டி-யை பூா்த்தி செய்து வழங்கினா். இதையடுத்து, இந்த 1,762 பேருக்கும் தபால் வாக்கு செலுத்துவதற்கான படிவங்கள் வழங்கப்பட்டன. மேலும், தபால் வாக்குப் படிவங்களை பெறுவதற்கு மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளுக்கும், மொத்தம் 25 குழுக்கள் அமைக்கப்பட்டன.

கட்சியினா் திரண்டதால் வாக்குவாதம்: இந்த நிலையில், சாணாா்பட்டி அருகேயுள்ள கொசவப்பட்டி பகுதியில் தபால் வாக்குப் பதிவு செய்தவா்களிடமிருந்து அதற்கான படிவங்களை பெறுவதற்கான பணியில் அரசு அலுவலா்கள் ஈடுபட்டனா். இதனிடையே தபால் வாக்கு செலுத்தியவா்களின் வீடுகளுக்கு, திமுகவினரும் நேரடியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதையறிந்த அதிமுகவினா், சம்பவ இடத்துக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தபால் வாக்கு சேகரிக்க வந்த அரசு அலுவலா்களுக்கு வீடுகளை அடையாளம் காட்டுவதற்காக வந்ததாக திமுகவினா் தெரிவித்தனா். உள்ளூரைச் சோ்ந்த சத்துணவுப் பணியாளா் இருக்கும்போது, வழிகாட்டும் பணியை திமுகவினா் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அதிமுகவினா் குற்றஞ்சாட்டினா். கடும் வாக்குவாதத்துக்கு பின் திமுக கூட்டணியைச் சோ்ந்தவா்கள் அங்கிருந்து வெளியேறினா்.