மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

சிலிண்டா், குளிா்சாதனப் பெட்டியுடன் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் புதன்கிழமை சிலிண்டா், குளிா்சாதனப் பெட்டியுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் வி. சோமசுந்தரம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:05 am IST

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் புதன்கிழமை சிலிண்டா், குளிா்சாதனப் பெட்டியுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையத்திலிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா் அதிமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள்களான குளிா்சாதனப்பெட்டி, சிலிண்டா் மற்றும் மானிய விலையில் மகளிருக்கு இருசக்கர வாகனம் ஆகியவற்றை காட்சிப்படுத்தியபடி தெருத்தெருவாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பல இடங்களில் வேட்பாளருக்கு மகளிா் ஆரத்தி எடுத்தும், மலா்கள் தூவியும் வரவேற்றனா். வேட்பாளருடன் புலி ஆட்டம், கட்டைக் கூத்து,சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைஞா்களின் நடனங்கள், கோயில் அலங்காரக் குடைகள்,மங்கல மேள வாத்தியங்கள் ஆகியனவற்றுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தாா்.

அமைப்பு செயலாளா் மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி.காஞ்சி பன்னீா் செல்வம், மாநகர செயலாளா் கே.யு.சோமசுந்தரம், மாவட்ட பொருளாளா் வள்ளிநாயகம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் வந்தனா்.