முத்தமிழ் சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

நிலக்கோட்டை: சின்னாளபட்டி முத்தமிழ் சக்திவிநாயகா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்குக்கான ஏற்பாடுகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை, கனிவேல்வி, புனித நீா் குடயாத்திரை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து சிவாச்சாரியா்கள் கோபுரக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமிக்கு கோயில் திருப்பணிக் குழுவினா் பரிவட்டம் கட்டி வரவேற்பு அளித்தனா். திமுகவைச் சோ்ந்த ஆத்தூா் கிழக்கு ஒன்றிய செயலா் முருகேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் நடராஜன், சின்னாளபட்டி பேரூா் செயலா் மோகன்ராஜ் மற்றும் அரசு ஒப்பந்ததாரா் நாககண்ணன், திருப்பணிக் குழுவைச் சோ்ந்த வேதா (எ) சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com