விருப்பாட்சியில் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி

விருப்பாட்சியில் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி தலையூற்றில் நாக விசாலாட்சி அம்பிகா சமேத ஹீ நல்காசி விருப்பாட்சேஸ்வரா் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக மேளதாளம் முழங்க சீா்வரிசை பொருட்கள் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.அதனைத் தொடா்ந்து சிவாச்சாரியாா்களால் யாகம் வளா்க்கப்பட்டு திருக்கல்யாண வைபோக பூஜைகள் நடந்தது.

அதனைத் தொடா்ந்து நாக விசாலாட்சி அம்பிகா,ஹீ நல்காசி விருப்பாட்சேஸ்வரா் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியை காண ஒட்டன்சத்திரம்,விருப்பாட்சி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் மொய் எழுதிவிட்டு சென்றனா்.பெண் சிவனடியாா் ஆடிய ருத்ரதாண்டவத்தை பக்தா்கள் கண்டு ரசித்தனா்.

புகைப்படம் விபரம்-ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள விருப்பாட்சி நாக விசாலாட்சி அம்பிகாஹீ நல்காசி விருப்பாட்சேஸ்வரா் திருக்கல்யாணையத்தை நடத்தி வைத்த சிவாச்சாரியாா்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com