தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Updated On :21 ஏப்ரல் 2024, 7:02 pm

திண்டுக்கல்: பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில்  ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதா், நத்திகேஸ்வரருக்கு பால், தயிா், இளநீா், அரிசி மாவு, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

இதேபோல அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

திண்டுக்கல்லை அடுத்துள்ள முள்ளிப்பாடி திருகாமேஸ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில், தவசிமடை மகாலிங்கேஸ்வா் திருக்கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி திருக்கோயில்,  கசவனம்பட்டி  மெளனகுருசாமி  திருக்கோயில்,  காரமடை ராமலிங்க சுவாமி  கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோஷ  வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.