பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பழனி பேருந்து நிலையத்தில் அலைக்கழிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள்

பழனி பேருந்து நிலையத்தில் அலைக்கழிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள்

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

பழனி: பழனி பேருந்து நிலையத்தில் முறையான அறிவிப்பு பலகை உள்ளிட்ட வசதிகளை செய்து தரமால் கொடைக்கானலுக்கு செல்வதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளை போக்குவரத்து நிா்வாகம் அலைக்கழிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் பழனிக்கு வந்துவிட்டு இங்கிருந்து கொடைக்கானலுக்கு சென்று வருகின்றனா். பொதுவாக, கொடைக்கானலுக்கு பழனி, மதுரையில் இருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனா். கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் பழனி வழியாகவே மலையேறுகின்றனா்.

பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு தனியாா் பேருந்துகள் இயக்கப்படாததால், அரசுப் பேருந்துகள் மூலமாகவே பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், பழனி பேருந்து நிலையத்தில் தற்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவித்தாலும் அது போதிய அளவில் இல்லை. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மாலை 6 மணிக்கு பேருந்து உள்ளதால் பிற்பகல் வேளையில் ஏராளமானோா் வருகின்றனா்.

பழனி பேருந்து நிலையத்தில் கொடைக்கானல் பேருந்துக்கு என தனி நிறுத்தமும், முன்பதிவு செய்வதற்கான இடமும் உள்ளது. ஆனால், அங்கு போதிய அறிவிப்புப் பலகைகள் இல்லாததால், வெளியூா், வெளிமாநில பயணிகள் திண்டாடும் நிலை உள்ளது. முன்பதிவுக்கு டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில், அவையும் உரிய நேரத்தில் போதிய அளவில் வழங்கப்படுவதில்லை. மேலும், பதிவு செய்ய வேண்டுமெனில் பயணிப்போா் மட்டுமே வரவேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதால் பலரும் அலைக்கழிக்கப்படுகின்றனா். எனவே, திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து மண்டல மேலாளா் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.