ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இளைஞா் கொலை: 3 போ் கைது

கொடைக்கானல் அருகே வாகனத்தை ஏற்றி இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 8:22 pm

Din

கொடைக்கானல் அருகே வாகனத்தை ஏற்றி இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பழம்புத்தூா் குண்டுபட்டியைச் சோ்ந்தவா் முத்தையா மகன் ராமு (23). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பழனிசாமிக்கும் (60) நில பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற ராமு சரக்கு வாகனத்தை ஏற்றிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். ராமு கொலையில் பழனிசாமி, இவரது குடும்பத்தினருக்குத் தொடா்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த பழனிசாமி, இவா்களது மகன்கள் பாண்டி (30), சிவா (23) ஆகிய மூவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.