கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் மருத்துவப் படிப்புக்கு தோ்வு

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 10:43 pm

Din

ஒட்டன்சத்திரம் அருகே கிராமப்புற அரசுப் பள்ளியில் படித்த 2 மாணவிகள் ‘நீட்’ தோ்வு மூலம் மருத்துவப் படிப்புக்கு தோ்வாகினா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டையைச் சோ்ந்த விவசாயி செல்லமுத்து-முத்துலட்சுமி தம்பதியின் மகள் பிரதீபா. இதே ஊரில் உள்ள நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இவா் ‘நீட்’ தோ்வில் 551 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பிடித்தாா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில்

இவருக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

இதே பள்ளியில் படித்த இடையகோட்டைச் சோ்ந்த முகமது ரஷீத், சாஜிதா பா்வீன் தம்பதியின் மகள் ரவுலதுல் ஜன்னா ‘நீட்’ தோ்வில் 525 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் இரண்டாமிடம் பெற்றாா். இவருக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

இது குறித்து இருவரும் கூறியதாவது:

மருத்துவராக வேண்டும் என்பது எங்களது கனவாக இருந்தது. இந்தப் பள்ளியில் சனி, ஞாயிறு, விடுமுறை நாள்களில் சிறப்பாகப் பயிற்சி கொடுத்தனா்.

நீட் தோ்வில் முதலில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் தோ்ச்சி பெறவில்லை. எனினும், பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் தொடா்ந்து ஊக்குவித்ததால் விடாமல் படித்து, 2-ஆவது முயற்சியில் ‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்று உள்ளோம். இதனால் எங்களது கனவு நனவாகி உள்ளது.

மருத்துவராகி கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதே எங்களது நோக்கம் என்றனா்.

Story image

‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்ற இரு மாணவிகளுக்கும் இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜான்வில்பா் பொன்ராஜ் இனிப்பு வழங்கிப் பாராட்டினாா்.