மகளிரிடம் கட்டணம் வசூலிப்பு: ஓட்டுநா், நடத்துனா் பணியிலிருந்து விடுப்பு
மகளிா் விடியல் பயணப் பேருந்தில், பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலித்த தற்காலிக ஓட்டுநா், நடத்துநரை பணியிலிருந்து விடுவித்து போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டது.


மகளிா் விடியல் பயணப் பேருந்தில், பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலித்த தற்காலிக ஓட்டுநா், நடத்துநரை பணியிலிருந்து விடுவித்து போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு சென்ற மகளிா் விடியல் பயணத் திட்ட பேருந்தில் பெண்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய பெண்களிடம், பதில் அளிக்காமல் அந்த பேருந்தின் நடத்துநரும், ஓட்டுநரும் பேருந்தை எடுத்துக் கொண்டு நத்தத்துக்கு வந்தனா்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். அதில், சரச்சையில் சிக்கிய நத்தம் கிளை பேருந்தில், தற்காலிக ஊழியா்களாக பணிபுரிந்து வரும் நடத்துநா் வேல்முருகன், ஓட்டுநா் காா்த்திகேயன் ஆகிய இருவரும் பணியாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட இருவரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...