தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கொத்தப்புள்ளியில் மக்கள் தொடா்பு முகாம்

திண்டுக்கல் அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 104 பயனாளிகளுக்கு ரூ.69.72 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் மொ.நா.பூங்கொடி புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:20 pm

Din

திண்டுக்கல் அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 104 பயனாளிகளுக்கு ரூ.69.72 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் மொ.நா.பூங்கொடி புதன்கிழமை வழங்கினாா்.

திண்டுக்கல் அடுத்த கொத்தப்புள்ளி ஊராட்சியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். அப்போது வேளாண்மை, தோட்டக்கலை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் சாா்பில், மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ.69.72 லட்சம் மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, அவா் பேசியதாவது:

மக்கள் தொடா்பு முகாம் நடத்துவதற்கு 15 நாள்களுக்கு முன்பு, கிராம நிா்வாக அலுவலா்கள், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவற்றுக்கு தீா்வு காணப்பட்டிருக்கிறது. கனவு இல்லம் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான வீடுகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு பெற்று பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இதேபோல, தொகுப்பு வீடுகளை பராமரிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாமில் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாண்டியன், வருவாய்க் கோட்டாட்சியா் சக்திவேல், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) நாகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.