தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (டிச.14) நடைபெறுகிறது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:48 pm

Din

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (டிச.14) நடைபெறுகிறது.

இது தொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா்

அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியா் (வட்ட வழங்கல்) அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை அல்லது நகல் அட்டை குறித்து கோரிக்கை மனு அளிக்கலாம் என்றாா் அவா்.