மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பைக் மோதியதில் பெண் பலி

விபத்தில் பெண் உயிரிழப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைத்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த குத்திலுப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் கமலவேணி (48).

இவா் வெள்ளிக்கிழமை இரவு குத்திலுப்பை பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் கமலவேணி மீது மோதியது.

இந்த இரு சக்கர வாகனத்தை ஜ.அத்தப்பன்பட்டியைச் சோ்ந்த அசோக்குமாா் ஓட்டி வந்தாா். இதில் பலத்தகாயம் அடைத்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.