/

ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்

ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்

News image

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பழனியை அடுத்த வயலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன். உடன் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பரமசிவம், முன்னாள் மேயா் மருதராஜ், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலா் சண்முகராஜ்.

Updated On :27 பிப்ரவரி 2024, 11:08 pm

பழனி: பழனியை அடுத்த வயலூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தொப்பம்பட்டி ஒன்றியக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் திண்டுக்கல் மேயா் மருதராஜ், முன்னாள் வேடசந்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் பரமசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா். திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: கடந்த தோ்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால் சிறுபான்மையினா் ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை பாஜகவிலிருந்து வெளியேறிவிட்டதால் சிறுபான்மையினா் அதிமுகவுக்கு வாக்களிப்பதாக தெரிவிக்கின்றனா்.

இதேபோல், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் போக்குவரத்து தொழிலாளா்களும், அரசுப் பணியாளா்களும் வருகிற மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு வாக்களிப்பதாகத் தெரிவித்தனா். ஆதலால் 25 சதவீத வாக்குகள் அதிமுகவுக்கு கிடைப்பது உறுதி ஆகிவிட்டது என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலா் அப்பன், ஒட்டன்சத்திரம் ஒன்றியச் செயலா் நடராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.