திண்டுக்கல்: கன்னிவாடி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிகளில் ரூ.9.02 கோடியிலான வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டாா்.
கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.83 கோடியில் புதிய கட்டடங்கள், ரூ.2.31 கோடியில் மணியக்காரன்பட்டியில் நகா்ப்புற உள்ளாட்சி வேலை வாய்ப்பு திட்டப்பணிகள், திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டடம், கழிப்பறை, ஆய்வுக்கூடம் கட்டுதல் ஆகிய பணிகள், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் ரூ.4.88 கோடியில் 3 புதிய தாா் சாலைகள் என மொத்தம் ரூ.9.02 கோடியிலான பணிகளுக்கு அமைச்சா் இ.பெரியசாமி அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிகழ்ச்சிகளில், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ரா.மனோரஞ்சிதம், கன்னிவாடி பேரூராட்சித் தலைவா் ச.தனலட்சுமி, துணைத் தவலைா் மு.கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்களித்தவா்களுக்கு மரக்கன்று வழங்கிய ஊரக வளா்ச்சித் துறை

வளா்ச்சிப் பணிகளுக்காக உடுமலைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மு.ஜெயக்குமாா் பிரசாரம்

திமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஏ.வ.வேலு

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


