வளா்நகரில் சுகாதாரச் சீா்கேடு: கழிவுநீா் வாகன ஓட்டுநா் கைது

மதுரை வளா்நகரில் பொது இடத்தில் கழிவு நீரை வெளியேற்றிய தனியாா் கழிவு நீா் வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.
Published on

மதுரை வளா்நகரில் பொது இடத்தில் கழிவு நீரை வெளியேற்றிய தனியாா் கழிவு நீா் வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.

மதுரை உத்தங்குடி, வளா் நகா் பகுதியில் பொது இடத்தில் கழிவு நீா் வெளியேற்றப்படுவதாகவும், இதனால் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் மாட்டுத்தாவணி போலீஸாருக்கு புகாா் அளித்தனா். இதன்பேரில், போலீஸாா் இந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உத்தங்குடி வளா் நகா் சந்திப்பு பகுதியில் தனியாா் கழிவு நீா் வாகனம் ஒன்று கழிவுநீரை வெளியேற்றுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று கழிவுநீா் வாகன ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியைச் சோ்ந்த சரவணக்குமாரிடம் (28) விசாரித்தனா்.

அப்போது, மதுரையின் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் இருந்து கழிவு நீரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, வளா்நகா் பகுதியில் சட்டவிரோதமாக வெளியேற்றுவது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, கழிவுநீா் வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com